
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள அரசடி பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு, அரசடி தெய்வகளக வீதியைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவ தினமான நேற்று இரவு 7 மணியளவில் தாய், தந்தையர் வெளியே சென்றிருந்த நிலையில், சகோதரியுடன் இருந்த சிறுமி சூம் வகுப்பில் கல்வி கற்றுக் கொண்டிருந்ததாகவும் அந்த நேரம் சகோதரி குளிக்க சென்று திரும்பி வந்தபோது சிறுமி அறையின் மின்விசிறி பொருத்தும் கம்பியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து நீதவான் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டதையடுத்து சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது .
இது தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் மாவட்ட பெண்கள் சிறுவர் பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.