இலங்கையில் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கினால் 60 வீத விலை அதிகரிப்பு ஏற்படும் சாத்தியம் இருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வாகன இறக்குமதி தடை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது, குறித்த சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
வாகன இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரியை அமெரிக்க டொலரில் செலுத்த இணங்கும் நபர்களுக்கு அனுமதி வழங்குமாறு குறித்த சங்கம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அமெரிக்க டொலரில் வரி செலுத்தும் இறக்குமதியாளர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குவது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதி குறித்து அரசாங்கம் ஆலோசனைகளை முன்வைத்தாலும் செயற்படுத்துவதில்லை என்று இந்திக சம்பத் குறிப்பிட்டுள்ளார்.