July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு மாநகர ஆணையாளருக்கு எதிராக ஆளும் தரப்பினர் போராட்டம்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக கொழும்பு மாநகர எல்லை பிரதேசத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உலர் உணவு பொதி வழங்குவதற்காக மாநகர சபையினால் பிரேரணை ஒன்றுக்கு அனுமதி கேட்டிருந்த போதும் மாநகர ஆணையாளர் அதற்கு அனுமதி வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகர ஆளும் கட்சி உறுப்பினர்கள் மாநகர வளாகத்தில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த போராட்டத்தில் மாநகர சபை மேயர் ரோசி சேனாநாயக்கவும் கலந்து கொண்டிருந்ததுடன், மாநகர சபை சிறிலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் ரம்சி டோனியும் கலந்து கொண்டிருந்தார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நிவாரணமாக, அவர்களுக்கு சதொச நிறுவனம் ஊடாக 4 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவு பொதியொன்றை பெற்றுக் கொடுப்பதற்கு மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தை செயற்படுத்துவதற்கு மாநகர ஆணையாளர் உட்பட அதிகாரிகள் அனுமதிக்காதமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் மாநகர ஆணையாளர் மேயரின் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ளார். இது தொடர்பில் கவனம் செலுத்தி நியாயமாக நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்து மேல் மாகாண ஆளுநரிடமும் கேட்டுக் கொள்வதாக  அவர்கள் தெரிவித்தனர்.