இலங்கைக்கு எதிரான அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டோம் என்று வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அதன் தனித்துவங்களைப் பாதுகாத்துக்கொண்டு, இறையாண்மையுடன் வெற்றியை நோக்கிப் பயணிக்க அரசாங்கம் வழிவகைகளை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையை வெற்றிகொள்வதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்புகள் கிடைக்கும் என்று வெளியுறவு அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் பிரச்சினைகளை உள்ளக நிறுவனங்களின் ஊடாக தீர்த்துக்கொள்வதற்கு முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு விவகாரங்களை வெளியக நிறுவனங்களுக்கு பொறுப்புக் கொடுப்பதை அங்கீகரிப்பதில்லை என்று ஜீ.எல். பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐநா, அதன் சட்ட ஒழுங்குகளுக்கு அமைய அனைத்து நாடுகளை சமமாக மதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.