கொவிட் கால விசேட கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கை முழுவதும் அரச வைத்தியசாலைகளில் சுகாதார ஊழியர்கள் அரைநாள் அடையாள பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது தமது கோரிக்கைகள் தொடர்பில், அந்தந்த வைத்தியசாலைகளுக்கு முன்னால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
இவர்களின் போராட்டம் இடம்பெற்ற காலப்பகுதியில் வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவுகள் இயங்கவில்லை. இதனால் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.