கொழும்பு நகர எல்லைக்குள் 67 ஆயிரத்து 741 பதிவு செய்யப்படாத கட்டடங்கள் இருப்பதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
பதிவு செய்யப்படாத கட்டடங்கள் அல்லது சொத்துக்களை அவசரமாகப் பதிவு செய்து, உரிமையை உறுதிப்படுத்துமாறு கொழும்பு மாநகர சபை கேட்டுக்கொண்டுள்ளது.
சொத்துக்களைப் பதிவு செய்துகொள்ள நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பதிவு செய்துகொள்வதன் ஊடாக தமது சொத்துரிமையைப் பாதுகாத்துக்கொள்ளுமாறும் கொழும்பு மாநகர சபை சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பு மாநகர எல்லைக்குள் உள்ள 47 தொகுதிகளில், ஒவ்வொரு தொகுதியிலும் பதிவு செய்யப்படாமல் உள்ள சொத்துக்களின் எண்ணிக்கை பட்டியலிடப்பட்டுள்ளது.