January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டை திறப்பதற்கான பரிந்துரைகளை வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்!

ஒக்டோபர் 1 ஆம் திகதி நாட்டை திறக்கும் போது சரியான சுகாதார நடைமுறைகளை அமுல்படுத்துவது குறித்து பரிந்துரைகளை வழங்குமாறு அனைத்து துறைகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஸ அறிவுறுத்தியுள்ளார்.

சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளிடமிருந்து ஜனாதிபதி இந்த பரிந்துரைகளை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கை நீக்கிக் கொள்வது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது. நாடு திறக்கப்படும் போது கொவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார விதிமுறைகளை அமுல்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

எவ்வாறாயினும், நாடு மீண்டும் திறக்கப்பட்ட போதிலும், சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுவதில் மக்கள் அதிக பொறுப்புடன் செயற்பட வேண்டும் என பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத்  ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.