இலங்கையைப் புறக்கணிப்பது முன்னோக்கிச் செல்வதற்கான வழியல்ல என்று நோர்வே பாராளுமன்றத்துக்குத் தெரிவாகிய இலங்கை வம்சாவளி தமிழ் உறுப்பினர் கம்சி குணரத்னம் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஊடகவியலாளர்களுடன் நடத்திய இணையவழி ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையுடன் தொடர்ந்தும் பணியாற்றுவதற்கு நோர்வே அரசாங்கத்தை தான் கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு அதிகமான முதலீடுகள் தேவை என்றும் அது தொழில்வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் என்றும் கம்சி தெரிவித்துள்ளார்.
அழைப்பு விடுக்கப்பட்டால் தான் இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் நோர்வே எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார்.
நோர்வே தொடர்ந்தும் கல்வி, வர்த்தக துறைகளில் இலங்கைக்கு உதவ வேண்டும் என்று கம்சி குணரத்னம் கேட்டுக்கொண்டுள்ளார்.