January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடமராட்சியில் வீடுகளுக்கு தீ வைப்பு : ‘வெட்டுக்குமார்’ கைது!

யாழ்ப்பாணம், வடமராட்சி – அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசத்தில் இரு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், மேலும் சில வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வாள்வெட்டுக் குழுவை சேர்ந்த ‘வெட்டுகுமார்’ என்பவரை கைது செய்துள்ளனர்.

இதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

கடந்த 2 ம் திகதி மது போதையில் அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தை சேர்ந்த வெட்டுக்குமாரும் அவரது குழுவினரும் இணைந்து அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்தி வன்முறையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மீண்டும் நேற்று முன்தினம் இரு வீடுகளுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த குறித்த கும்பல் அப்பகுதியில் உள்ள மேலும் சில வீடுகளின் ஜன்னல்கள் உடைத்தும், சொத்துக்கள் உடமைகள் என்பவற்றுக்கு தீ வைத்து அவற்றை தீக்கிரையாக்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் வெட்டிக்குமார் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவனது சகோதரன் ஜெயா என்பவர் உள்ளிட்ட சிலர் தலைமறைவாகியுள்ளதாக தெரியவருகின்றது.

இந்நிலையில் இவ்வாறாக குழுக்களின் செயற்பாடுகளினால் தினமும் அச்சத்துடன் வாழ்வதாக அல்வாய் வடக்கு மகாத்மா கிராம மக்கள் கூறுகின்றனர்.

This slideshow requires JavaScript.