இலங்கையின் முயற்சிகள், காணாமற்போனோர் அலுவலகம், இழப்பீடு வழங்கும் அலுவலகம், மோதலுக்குப் பிந்தைய அபிவிருத்தி மற்றும் தேசிய ஒற்றுமைக்கான பங்களிப்பு குறித்து இலங்கை மற்றும் தென்னாபிரிக்காவின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துரையாடியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது அமர்வின் பக்க நிகழ்வாக, நியூயோர்க்கில் உள்ள தென்னாபிரிக்காவின் நிரந்தர தூதரகத்தில் தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் கலாநிதி நலேடி பண்டோரை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சந்தித்தார்.
வளமான அனுபவம், நல்லிணக்கம் மற்றும் உண்மை ஆகிய துறைகளிலான தனித்துவமான தென்னாபிரிக்காவின் வரலாற்றை இலங்கை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அமைச்சர் பீரிஸ் இந்த சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முயற்சிகள், காணாமற்போனோர் அலுவலகம், இழப்பீடு வழங்கும் அலுவலகம், மோதலுக்குப் பிந்தைய அபிவிருத்தி மற்றும் தேசிய ஒற்றுமைக்கான பங்களிப்பு குறித்தும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
தமது அனுபவங்களையும் பாடங்களையும் மோதலுக்கு பிந்தைய பிரச்சினைகளை தீர்க்க விரும்பும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் தென்னாபிரிக்கா மகிழ்ச்சியடைவதாக தென்னாபிரிக்க வெளிவிவகார அமைச்சர் நலேடி பண்டோர் இதன்போது கூறியுள்ளார்.