May 23, 2025 16:09:34

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அஸ்கிரிய, மல்வத்து பீடாதிபதிகளை சந்திக்கவுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழுவொன்று நாளை (திங்கட்கிழமை) அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடாதிபதிகளை சந்திக்கவுள்ளது.

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்டி அஸ்கிரி பீடத்திற்கும் பின்னர் மல்வத்து பீடத்திற்கும் சமுகமளித்து, கெரவலபிட்டிய யுதனவி மின் உற்பத்தி நிலையத்தை அரசாங்கம் அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைப்பது குறித்து விளக்கமளிக்கவுள்ளனர்.