July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

44 சுகாதார தொழிற்சங்கங்கள் திங்கட்கிழமை அடையாள வேலை நிறுத்தம்

8 கோரிக்கைகளை முன்வைத்து 44 சுகாதார தொழிற்சங்கங்கள் திங்கட்கிழமை (27) அடையாள வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளன.

அதன்படி, திங்கட்கிழமை காலை 7 மணி முதல் 5 மணி நேர வேலை நிறுத்தத்தில் குறித்த தொழிற்சங்கங்கள் ஈடுபடவுள்ளன.

கடந்த ஜூன் மாதம் முதல் வழங்கப்பட்ட 7,500 ரூபாய் கொவிட் -19 கொடுப்பனவு நிறுத்தம் உட்பட சுகாதார ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யக் கோரியே இந்த வேலை நிறுத்தம் இடம்பெறவுள்ளதாக குறித்த தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. .