அடுத்த ஆண்டு முதல் தினசரி 5,000 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்ப்பதாக சுற்றுலா துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
நாட்டில் கொவிட் தொற்று வீழ்ச்சியடைந்துவரும் நிலையில், சுற்றுலாத் துறை படிப்படியாக மீண்டு வருவதாகவும், அடுத்த மூன்று மாதங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.
கடந்த சில மாதங்களில் கிட்டத்தட்ட 45,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.
கடந்த காலங்களில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட சுற்றுலா துறையினருக்கு பல்வேறு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் சுற்றுலா துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டினார்.