இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் மின்சார முச்சக்கர வண்டியான வேகா எலக்ட்ரிக் (Vega Electric Three Wheeler) முச்சக்கர வண்டி 2022 ஏப்ரல் மாதத்திற்குள் சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
வேகா எலக்ட்ரிக் முச்சக்கர வண்டி சமீபத்தில் பன்னலையில் உள்ள சர்வதேச மோட்டார் கார் பந்தயப் பாடசாலையில் சோதனை செய்யப்பட்டது.
இதனிடையே, இந்த மின்சார முச்சக்கர வண்டி 2022 ஏப்ரல் மாதத்திற்குள் சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தற்போது இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படும் சராசரி முச்சக்கர வண்டியை விட விலை குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வேகா இனோவேஷன் நிறுவனத்தின் பணிப்பாளர் பேராசிரியர் பேஷான் குலாபால தெரிவித்துள்ளார்.
அத்துடன், 2027 ஆம் ஆண்டுக்குள் இது உலகளவில் 32 பில்லியன் டொலர்களைக் கொண்ட தொழிலாக இருக்கும் என்றும், அதில் 10 சதவீதப் பங்கைப் பெறுவதே தனது குறிக்கோள் என்றும் அவர் மேலும் கூறினார்.
இது முழுமையாக மின்சாரத்தில் இயங்குகின்ற முச்சக்கர வண்டியாகும். இது சாதாரண முச்சக்கர வண்டியிலிருந்து மிகவும் வித்தியாசமானது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 100-120 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க முடியும்.
அத்துடன், கூடுதலாக, இதன் கூரையில் ஒரு சோலார் பேனல் எனப்படுகின்ற சூரிய தகடைக் கொண்டுள்ளது. எனவே, சூரிய வெளிச்சத்துக்கு நடுவில் முச்சக்க ர வண்டியை நிறுத்தும்போது அல்லது வாகனம் ஓட்டும்போது கூட, அது அதிக சக்தியைப் பெறவும் நீண்ட தூரம் ஓட்டவும் வாய்ப்பு உள்ளது.
ஒரு வழக்கமான முச்சக்கர வண்டியைப் போல சாரதி மற்றும் பின்னால் மூன்று பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும். ஆனால், சாதாரண முச்சக்கர வண்டியின் பின்னால் பொருட்களை வைக்க இடமில்லை. இதனால் நீங்கள் அதை இருக்கையில் வைக்க வேண்டும்.
ஆனால் இந்த முச்சக்கர வண்டி மின்சாரத்தில் இயங்குவதால், அதற்கு இயந்திரம் இல்லை. அதனால்தான் பொருட்களை எடுத்துச் செல்ல பின்புறத்தில் அதிக இடம் இருக்கிறது என அவர் கூறினார்.
உண்மையில், இது இலங்கை சந்தையை இலக்காகக் கொண்டு நாங்கள் செய்யும் ஒன்றல்ல. இலங்கை ஒரு இலக்கு. இருப்பினும், உலக சந்தையைப் பார்த்தால், 2019 இல் மின்சார முச்சக்கர வண்டியின் விற்பனை பெறுமதி 28 பில்லியன்களாக இருந்தது. 2027 க்குள், அது 32 பில்லியன்களை எட்டும். இதன்பொருள் இந்த முச்சக்கர வண்டிக்கு மிக வேகமாக வளர்ந்து வரும் உலக சந்தையில் அதிக தேவை ஏற்பட்டுள்ளது. அந்த சந்தையில் நாங்கள் 10 சதவீதத்தை இலக்கு வைத்திருக்கிறோம், அதாவது 3 பில்லியன்களாகும். ஒவ்வொரு ஆண்டும் 3 பில்லியன் வர்த்தகம் இடம்பெறும்
இது உண்மையில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஒரு தயாரிப்பு என்று வேகா இனோவேஷன் நிறுவனத்தின் பணிப்பாளர் பேராசிரியர் பேஷான் குலாபால தெரிவித்தார்.