January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திருகோணமலையில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

திருகோணமலை, நிலாவெளி பிரதேசத்தில் சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட வெடிபொருட்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படையினரும், நிலாவெளி பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின்போது குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் முச்சக்கரவண்டியில் ‘வோட்டர் ஜெல்’ எனப்படும் 27 வெடிபொருட்களையும், 500 டெட்டனேட்டர்களையும் கொண்டு சென்றுள்ளார்.

இந்நிலையில், குறித்த முச்சக்கரவண்டியை சோதனையிட்டபோது இந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிலாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான சந்தேகநபருடன், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக நிலாவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.