இலங்கையில் வாகன இறக்குமதி மீதான தடையை தளர்த்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
எனினும், அந்நிய செலாவணி நாட்டிற்குள் வருவதை பொறுத்தே வாகனங்கள் உள்ளிட்ட ஏனைய இறக்குமதி தடைகளை நீக்குவது தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
சர்வதேச வர்த்தக சபை ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இதனைத் தெரிவித்தார்.
இதற்கமைய நாட்டில் தற்போது அமுலில் உள்ள பல இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
சுற்றுலாத் துறையை விரைவில் தொடங்க அரசு கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், ஏற்றுமதி சார்ந்த துறைகள், வளமை போன்று செயல்படி முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.