November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள டெல்டா வைரஸின் உப திரிபு ஆபத்தானதா?

(File photo)

இலங்கையில் தற்போது பரவி வரும் டெல்டா வைரஸின் மாறுபாட்டின் உபதிரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.

இந்த உப திரிபு AY.28 என்று உத்தியோகபூர்வமாக பெயரிடப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ துறையின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

இது நாட்டில் ஏற்கனவே பரவல் அடைந்து வரும் B.1.617.2.28, கொவிட் வைரஸை சேர்ந்தது என்று அவர் கூறியுள்ளார்.

தற்போது இனங்காணப்பட்டுள்ள உப திரிபு (AY.28) போன்று மேலும் பல உப திரிபுகள் உருவாகக்கூடும் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் வைரஸ் தொற்று தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நதீக ஜானக குறிப்பிட்டார்.

எனினும் புதிய உப பிறழ்வு மற்றும் டெல்டா பிறழ்வின் செயற்பாடுகள் ஒரே விதமாக காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், வைரஸ் தொற்றினால் ஏற்படும் ஆபத்தான நிலையை தவிர்த்துக் கொள்ள ஒவ்வொருவரும் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளுதல் இன்றியமையாது என கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மருத்துவ ஆய்வு பிரிவின் பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.