
தற்போதைய ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பண்டாரநாயக்கவின் கொள்கையை விற்றுத் தின்கிறது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவின் 62 ஆவது நினைவு தினத்தையொட்டி, ஹொரகொல்லவில் உள்ள அவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தச் சென்றிருந்த போதே சந்திரிகா இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த சந்திரிகா, ”கட்சி தற்போது பண்டாரநாயக்கவின் பெயரை விற்று தின்றதே தவிர வேறு ஒன்றையும் செய்யவில்லை. இப்போதுள்ள தலைவர் ஜனாதிபதியாக 5 வருடங்கள் இருந்துள்ளார். ஆனால் அவர் இந்த இடத்திற்கு ஒரு தடவையே வந்துள்ளார்” என்றார்.
இதேவேளை சந்திரிகா அங்கு அஞ்சலி செலுத்திச் சென்றப் பின்னர், கட்சியின் தற்போதைய தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த இடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பண்டாரநாயக்கவில் கொள்ளை மற்றும் இலக்குகளை நாங்கள் முன்னெடுத்துச் செல்வோம் என்று இதன்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளர்.