November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொலிஸாரின் தடைகளையும் தாண்டி திலீபனுக்கு அரசியல்வாதிகள் அஞ்சலி

திலீபனின் 34 ஆம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி நிகழ்வுகள், பொலிஸாரின் தடைகளையும் மீறி இன்றைய தினம் வடக்கில் நடத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் வல்வெட்டிதுறையிலுள்ள தனது அலுவலகத்தில் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

காலை 10.48 மணியளவில் அவர் சுடரேற்றி மலர் தூபி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதன்போது அவரது அலுவலகத்திற்கு முன்பாக பெருமளவான பொலிஸார் நின்றிருந்தனர்.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கிளிநொச்சியிலுள்ள தனது அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதி ஐந்து கோரிக்கைகைளை முன்வைத்து திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தண்ணீர் அருந்தவும் போவதில்லை என்று அறிவித்திருந்தார். ஆனால் அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தில் இருந்த திலீபன் பனிரெண்டாம் நாளான செப்டம்பர் 26ஆம் திகதி மரணமடைந்தார்.

இவரின் 34 ஆவது நினைவு வாரம் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பானமான நிலையில், நல்லூரிலுள்ள அவரின் நினைவிடத்தில் நிகழ்வுகளை நடத்துவதற்கு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் ஊடாக பொலிஸார் தடையுத்தரவை பெற்றுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.