July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இசைக்கலாமணி வர்ண ராமேஸ்வரன் கொவிட் தொற்றால் காலமானார்

சங்கீத, மிருதங்க கலாவித்தகர் இசைக்கலாமணி வர்ண ராமேஸ்வரன் கொவிட் தொற்றால் கனடாவில் காலமானார்.

கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் நேற்று காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் ஈழத்தில் பல முக்கிய பாடல்கலைப் பாடியுள்ளார். அத்தோடு இலங்கை வானொலி மற்றும் தொலைக்காட்சிகளிலும் இசைக்கலைஞராக விளங்கி, பல நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தும் உள்ளார்.

இவரின் மாவீரர் துயிலும் இல்லப் பாடலான “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே” என்ற பாடல் பிரபலமானது.

இலங்கையில் நிலவிய போர் சூழல் காரணமாக கனடாவில் குடியேறிய வர்ண ராமேஸ்வரன், அங்கு தமிழிசையை பரப்பும் செயற்பாட்டில் ஈடுபட்டதுடன் பல இடங்களில் இசை வகுப்புக்களையும் நடத்திவந்துள்ளார்.