மன்னர், பண்டிவிருச்சான் பகுதியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது நேற்று இரவு இனம் தெரியாத குழு ஒன்று தாக்குதலை நடத்தியுள்ளது.
ஊடகவியலாளரின் வீட்டுக்கு முன்னால் வந்துள்ள இனம் தெரியாத நபர்கள், வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த விடயத்தை அறிந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்ட நிலையில் அக்குழுவினர் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோவில் மோட்டை காணி பிரச்சினை தொடர்பில் செய்திகளை வெளியிட்டு வந்த நிலையிலேயே அந்த ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவத்திற்கு முன்னர், அருட்தந்தையொருவர் தொலைபேசி மூலம் தன்னை அச்சுறுத்தியுள்ளதாக குறித்த ஊடகவியலாளர் மடு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்படி தனக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்த அருட்தந்தை மற்றும் வீட்டின் மீது தாக்குதலை மேற்கொண்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அந்த ஊடகவியலாளர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்து கோரிக்கை விடுத்துள்ளார்.