அரசாங்கம் எதிர்பார்த்துள்ளமைக்கு அமைய நாட்டை ஒக்டோபர் முதலாம் திகதி மீண்டும் திறக்க வாய்ப்பில்லை என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
சர்வதேச வர்த்தக சபையுடனான குழு கலந்துரையாடலில் பேசும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
உள்நாட்டு சந்தைக்கு எரிபொருள் கொள்வனவில் தாமதம் ஏற்பட்டதாக வெளியான தகவல்களை அடுத்து இவ்வாறு ஒக்டோபர் 1 ஆம் திகதி நாட்டில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படாது.
இதன் காரணமாக நாட்டை மீண்டும் திறப்பது ஒக்டோபர் நடுப்பகுதி வரை தாமதமாகலாம் எனவும் ரணில் விக்ரமசிங்க பரிந்துரைத்தார்.
இதனிடையே ஒக்டோபர் முதலாம் திகதி நாட்டை திறக்க எதிர்பார்த்துள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவும் சுகாதார அமைச்சரும் தெரிவித்திருந்தனர்.