இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை சந்திக்கவுள்ளனர்.
ஜிஎஸ்பி வரிச் சலுகையை நீடிப்பது குறித்து ஆராய ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் திங்கட்கிழமை இலங்கைக்கு வரவுள்ளனர்.
பயங்கரவாத தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பதனை தாம் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் வலியுறுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஜிஎஸ்பி வரிச் சலுகையை நீடிப்பதா, இல்லையா என்பது குறித்து ஆராய்வதே ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளின் விஜயத்தின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவில் ஐந்து விசேட பிரதிநிதிகள் உள்ளடங்குவதாக தெரியவருகிறது.
இலங்கைக்கு வருகை தரும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் ஜனாதிபதி, பிரதமர் உட்பட பல்வேறு தரப்பினரைச் சந்திக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.