May 4, 2025 10:33:05

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் இருந்து கொழும்புக்கு போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு போதைப்பொருள் கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏ9 வீதியில் சந்தேகநபர்கள் பயணித்த வாகனம் பரிசோதிக்கப்பட்ட போதே, போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் உள்ளடங்குவதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 6 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.