
அரசாங்கத்தின் கெரவலபிடிய ஒப்பந்தம் தொடர்பில் மகாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளிக்கவுள்ளதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
அரசாங்கம் கெரவலபிடிய மின்னுற்பத்தி நிலையத்தை இரவோடிரவாக அமெரிக்க நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை தொடர்பில் எதிர்க்கட்சி அஸ்கிரி மற்றும் மல்வத்த மகாநாயக்க தேரர்களுக்கு திங்கட்கிழமை விளக்கமளிக்கவுள்ளதாக எதிர்க்கட்சி எம்.பி. நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
கெரவலபிடிய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளிடையேயும் முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன.
குறித்த மின்னுற்பத்தி நிலையத்தை எவ்வித விலைமனு கோரலும் இன்றி, அரசாங்கம் அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு விற்கபனை செய்துள்ளதாக எதிர்க்கட்சி குற்றம்சாட்டுகிறது.