January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘யொஹானி, ஷதீஷனை கௌரவிக்க தயாராகிறது அரசாங்கம்’: அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ

‘மெனிகே மகே ஹிதே’ என்ற பாடல் மூலம் உலகப் புகழ் பெற்ற யொஹானி டி சில்வா மற்றும் ஷதீஷனை கௌரவிப்பதற்கு அரசாங்கம் தயாராகுவதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இவர்கள் பல்வேறு மட்டங்களிலும் கௌரவிக்கப்பட்டு வரும் நிலையில், அரசாங்கம் கௌரவிக்கத் தவறியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரும், சமூக ஊடகங்களில் பொதுமக்களும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

‘நாட்டில் நிலவும் கொரோனா பரவல் காரணமாக கௌரவிப்பு நிகழ்வு நடத்தப்படவில்லை. கொரோனா நிலைமைகள் சீராகும் போது யொஹானி மற்றும் ஷதீஷனை அரசாங்கம் கௌரவிக்கும்’ என்று அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ பதலளித்துள்ளார்.

உலக அளவில் ஹிட் ஆகியுள்ள ‘மெனிகே மகே ஹிதே’ பாடல் யூடியுபில் 122 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்துள்ளது.