நாட்டின் வளங்களை கண்மூடித்தனமாக விற்கும் செயற்பாடுகளை நாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமாட்டோம். அரச திறைசேரிக்கு சொந்தமான பங்குகளை இவ்வாறு விற்பது இறுதியாக அரசாங்கத்தை மட்டுமல்ல, முழு நாட்டையுமே பாதிக்கும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து வரும் கோரிக்கைகளை ஆராயாது அவ்வாறே நடைமுறைப்படுத்துவதாக இருந்தால் இங்கு ஆட்சி செய்ய அரசாங்கம் எதற்கு?. ஆகவே பிரதமரிடம் இந்த காரணிகளை தெரிவித்துள்ளோம். ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் இந்த தீர்மானங்கள் குறித்து மீண்டும் கலந்துரையாடி உடன்படிக்கையை நிறுத்த சகல நடவடிக்கையையும் எடுப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தியை நாம் ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஆனால் இலங்கைக்கு சாதகமான விதத்தில் இவற்றை மாற்றியமைக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. ஆகவே ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் முதல் வேலையாக இது குறித்து கலந்துரையாடுவோம் என கூறியுள்ளார்.