(Photo:unescap.org)
நீராவி மூலம் இயங்கும் ரயிலை கோட்டை – அம்பேபுஸ்ஸ ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையே சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.
இலங்கையில் 1864 இல் கொழும்பு கோட்டையில் இருந்து அம்பேபுஸ்ஸ ரயில் நிலையத்திற்கு நாட்டின் முதல் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டதை குறிக்கும் வகையில் இந்த ரயில் இயக்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.
நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர சுட்டிக்காட்டினார்.
போக்குவரத்து நெரிசலை குறைக்க ரயில் சேவைகளை விரிவுபடுத்துவதே நடைமுறை தீர்வு. எனவே, பிரதான ரயில் பாதையை விரிவுபடுத்துதல் மற்றும் நாட்டிற்கு மின்சார ரயில்களை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட பல சிறப்புத் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.