இலங்கையில் கடுமையான குற்றச் செயல்களைப் புரிகின்ற 18 வயதுக்குக் கீழ்பட்ட சிறுவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றக்கூடாது என்ற புதிய சட்டத்திருத்தம் விரைவில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
புதிய சட்டத் திருத்தமானது, தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் சேர்க்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய சட்டத்திருத்தத்துக்கு அமைய, 18 வயதிற்கு கீழ்பட்ட ஒருவர் குற்றச்செயலில் ஈடுபட்டால் அந்த நபருக்கு எதிராக மரண தண்டனையை விதிக்கவோ அல்லது அமுல்படுத்தவோ கூடாது, அதற்குப் பதிலாக பொருத்தமான தண்டனையை அவருக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த விடயம் குறித்து ஆராய்ந்த சிறப்புக் குழுவின் பரிந்துரைகளுக்கமைய இந்தத் திருத்தம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.