May 24, 2025 19:01:36

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் தினசரி கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

இலங்கையில் மேலும் 82 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று இந்த மரணங்கள் பதிவானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களிடையே 31 பெண்களும் 51 ஆண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 12,530 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே கராப்பிட்டிய மருத்துவமனையில் கொவிட் -19 தொற்றுக்கு  சிகிச்சை பெற்றுவந்த 31 வயது மருத்துவர் ஒருவர் கடந்த புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.

இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 1332 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 510,963 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து இதுவரையில் 452,692 பேர் குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.