January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘செப்டெம்பர் 11’ நினைவேந்தல் நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய பங்கேற்பு!

2001 செப்டெம்பர் 11 ஆம் திகதி, அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் 20 வருட பூர்த்தியையொட்டி நடத்தப்பட்ட  நினைவேந்தல் நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கலந்துகொண்டார்.

ஐ.நா பொதுச் சபைக் கூட்டத் தொடரில் பங்கேற்றுள்ள  உலக நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், மேற்படி தாக்குதல்களால் உயிரிழந்தவர்களுக்கு கௌரவமளிக்கும் வகையில், நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத்தொடரையொட்டி, ஐக்கிய நாடுகள் பயங்கரவாத எதிர்ப்பு அலுவலகம் மற்றும் செப்டெம்பர் 11 நினைவு அருங்காட்சியகம் ஆகியன இணைந்து, இந்த நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

This slideshow requires JavaScript.