January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புத்தளத்தில் மீட்கப்பட்ட அரியவகை ஆந்தைகள்

புத்தளம் பகுதியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அலுவலகத்திலிருந்து அரியவகை ஆந்தைகள் மீட்கப்பட்டுள்ளன.

அலுவலக கூரையில் இருந்து இந்த ஆந்தைகள் நிலத்தில் விழுந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வாறு கீழே விழுந்த மூன்று ஆந்தைகள் உயிருடன் இருந்துள்ளதுடன், அவை பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆந்தைகள் இலங்கையில் அரிதானது என்று வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.