May 28, 2025 11:55:19

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பின் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு

நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று நிலையை அடுத்து, கொழும்பில் மேலும் சில பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

தெமட்டகொடை மற்றும் மருதானை பொலிஸ் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரும்வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோல களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பேருவளை, அளுத்கம, பயாகல ஆகிய பிரதேசங்களுக்கு 26 ஆம் திகதி காலை 5 மணி வரை பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறியுள்ளார்.