
File Photo
அனுராதபுரம் மாவட்டத்தின் திரப்பன, வெவ்பிட்டிய பகுதியில் காட்டு விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த கட்டுத்துவக்குகளில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் குறித்தப் பிரதேசத்தை சேர்ந்த 51 மற்றும் 60 வயது ஆண்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பகுதியில் உள்ள குளத்திற்கு நீர் அருந்த வரும் விலங்குகளை பிடிக்கும் வகையில், வேறு வேட்டைக்காரர் ஒருவரால் அந்த கட்டுத்துவக்குகள் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த நபர்கள் விலங்கு வேட்டைக்காக அந்த வழியால் செல்லும் போது துவக்குகள் வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கட்டுத்துவக்குகளை வைத்ததாக சந்தேகிக்கப்படும் 62 வயது நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.