July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மதுபான சாலைகளை திறப்பதை விட மிக குறைந்த அச்சுறுத்தல் நிலையே பாடசாலைகளை திறப்பதில் காணப்படுகின்றது’

நாட்டில் மதுபான சாலைகளையும் விருந்தகங்களையும் திறப்பதை விடவும் மிகக் குறைந்த அளவிலான அச்சுறுத்தல் நிலையே பாடசாலைகளை திறப்பதில் காணப்படுகின்றது. பாடசாலைகளில் தாராளமாக சமூக இடைவெளிகளை கையாண்டு கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனிய சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டமும், பாடசாலைகளை திறக்கும் காரணியும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட காரணிகளாகும்.கொவிட் வைரஸ் பரவலை முழுமையாக இல்லாதொழிக்க தடுப்பூசி மட்டுமே போதாது என்பது உண்மை என்றாலும், கொவிட் மரணங்களை தடுக்கவும் தொற்றாளர்கள் புதிதாக உருவாகாது இருக்கவும் தடுப்பூசி அவசியமாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தடுப்பூசியை ஏற்றிக் கொண்டுள்ளோம் என்பதற்காக விரும்பியவாறு செயற்பட முடியாது.நாம் எப்போதுமே சுகாதார வழிமுறைகளை பின்பற்றியாக வேண்டும். அதேபோல், சிறுவர்கள் விடயத்தில் அதி கூடிய கவனம் எடுக்க வேண்டியது சகல பெற்றோர்களினதும் கடமையாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.