February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சி.சி.ரி.வி காணொளி பதிவுகள் அழிக்கப்படாது விசாரணைகள் முன்னெடுக்கப்படுமா?; சுமந்திரன் எம்.பி. கேள்வி

அனுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறையில் உள்ள சி.சி.ரி.வி காணொளி பதிவுகள் அழிக்கப்படாது விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்ற வாக்குறுதியை வழங்க முடியுமா? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.

இந்த விடயத்தில் சி.சி.ரி.வி காணொளிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.குறித்த இராஜாங்க அமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்த பின்னர் சில விடயங்களை அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.

சிறையில் உள்ள சி.சி.ரி.வி காணொளிகள் அழிக்கப்பட மாட்டாது என கூறியுள்ளார்.ஆனால் அவர் கூறிய கருத்தின் பின்னர் சில நிறுவனங்கள் அனுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைகளில் சி.சி ரி.வி காணொளிகள் இல்லையென கூறியுள்ளன.ஆகவே இரு வேறு கருத்துக்கள் இதில் உள்ளன.எனவே குறித்த சிறைகளில் உள்ள சி.சி.ரி.வி காணொளிகள் அழிக்கப்படாது என்ற வாக்குறுதி எமக்கு வழங்கப்பட வேண்டும்.

வெலிக்கடை சிறையில் சி.சி.ரி.வி கமராக்களே இல்லை எனவும் சிலர் கூறுகின்றனர். ஆகவே இதனை கருத்தில் கொண்டு குழப்பங்களை ஏற்படுத்தாது இருக்க வேண்டும்.அதேபோல் குறித்த இராஜாங்க அமைச்சரின் தனிப்பட்ட துப்பாக்கியை அவரிடம் இருந்து பறிமுதல் செய்ய சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.