
2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிட முடியும்.
கடந்த மார்ச் மாததத்தில் பரீட்சை நடைபெற்றதுடன், நாட்டில் நிலவும் கொவிட் தொற்றால் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக அதற்கான செயன்முறை பரீட்சைகளை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. இதனால் பெறுபேற்றை வெளியிடுவது தாமதமாகியது.
இந்நிலையில் இன்று இரவு பெறுபேற்றை வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கையெடுத்துள்ளது.
எவ்வாறாயினும் பரீட்சைக்குறிய செயன்முறைப் பரீட்சைகளை பாடசாலைகள் திறக்கப்பட்ட பின்னர் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை பரீட்சையில் நாடுமுழுவதும் இருந்து 622,352 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.