கெரவலபிடிய மின்னுற்பத்தி நிலையம் இரவோடிரவாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம்சாட்டியுள்ளார்.
விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டே, அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நாட்டு வளங்களை இரவோடிரவாக விற்பனை செய்யும் அரசாங்கத்தின் போலி தேசப்பற்று தோலுரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசப்பற்று வாக்குறுதிகள் மூலம் ஆட்சிக்கு வந்தவர்கள், மக்களின் வாழ்வாதாரத்தை இல்லாதொழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கெரவலபிடியவில் நிர்மாணிக்கப்படவுள்ள எரிவாயு விநியோகத் திட்டம் விலை மனு கோரல் இன்றி வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதையும் எதிர்க்கட்சி கண்டித்துள்ளது.
அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகள் வலுசக்தி துறையை மாத்திரம் அன்றி முழு நாட்டையும் ஆபத்தில் தள்ளுவதாகும் என்று சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையைப் போன்ற சிறிய நாடொன்றின் வலுசக்தி கட்டுப்பாடு வெளிநாடொன்றின் கீழ் வருவது ஆபத்தானது என்றும் எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.