May 3, 2025 4:24:24

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நாட்டை முழுமையாகத் திறக்க வேண்டாம்’: சுகாதாரத்துறை வலியுறுத்தல்

நாட்டை முழுமையாகத் திறக்க வேண்டாம் என்று சுகாதாரத்துறை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீக்கும் தீர்மானத்தை எடுக்கும் போது, இதுதொடர்பாக கவனம் செலுத்தும்படி சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படவில்லை என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமன்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு முழுமையாக நீக்கப்படும் போது, கொரோனா பரவல் மோசமடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டை படிப்படியாக திறப்பதன் ஊடாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.