
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட சிலர், யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முற்பட்ட போதே கஜேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வு நடத்துவதை தடுக்கும் வகையில் அந்தப் பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட சிலர் இன்றைய தினம் அஞ்சலி செலுத்த சென்ற போது , அதற்கு பொலிஸார் தடை விதித்தனர்.
நீதிமன்ற தடையுத்தரவு இன்றி என்னை தடுக்க முடியாது என கூறி, பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தடைகளை மீறி அஞ்சலி செலுத்த முற்பட்ட வேளை அவரையும் அவருடன் சென்றவர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.