இந்தியாவின், ஹரியானா மாநிலத்தின் ஆளுநரான பண்டாரு தத்தாத்திரேயாவை இலங்கையின் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் செந்தில் தொண்டமான் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
அண்மையில், இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டபோதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் ஹரியானா மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.
இந்தியாவில் தொழில்துறையில் முன்னணி மாநிலமாக ஹரியானா மாநிலம் உள்ளது.
இதன்போது இலங்கையின் கிழக்கு மாகாண மற்றும் மலையகத்தில் பின்தங்கிய பிரதேசங்களில் தொழில் பேட்டைகள் அமைப்பது தொடர்பாகவும், வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு பால் உற்பத்தி போன்ற சுயதொழில் ஊடாக பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்தும் இருதரப்பினரும் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
இக்கலந்துரையாடலின் போது, ஹரியானா அரசு இவ் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க உதவி வழங்குவதாக உறுதியளித்தது.
Glad to have met Shri Sathasivam Viyalanderan, State Minister, #SriLanka, at Raj Bhavan today.
Assured him all support from #Haryana government in the field of rural #development, animal husbandry, automobiles and #crop cultivation. pic.twitter.com/XehNVAL0PZ
— Bandaru Dattatreya (@Dattatreya) September 13, 2021