January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாராளுமன்றத்தில் குறைவாக பங்களிப்பு செய்த 10 உறுப்பினர்களின் பட்டியல் வெளியானது

இலங்கையின் பாராளுமன்றத்தில் மிகக் குறைவாகப் பங்களிப்பு செய்த 10 உறுப்பினர்களின் பெயர் பட்டியலை, பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளை மதிப்பீடு செய்யும் manthri.lk இணையதளம் வெளியிட்டுள்ளது.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதல் வருடத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்புகளை அடிப்படையாக வைத்தே, இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

மிகக் குறைவாக பங்களிப்பு செய்தவர்களில் முதலாமிடம் டிரான் அல்லஸ் எம்.பிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் முறையே பாராளுமன்ற உறுப்பினர்களான அலி சப்ரி ரஹீம் மற்றும் மர்ஜான் பழீல் ஆகியோர் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

இதுதொடர்பான முழுமையான பட்டியலை கீழே இணைக்கப்பட்டுள்ள படத்தில் காணலாம்.