January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனூஷ நாணயக்கார இன்று இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

நாட்டின் நிதிப் பரிபாலனம் ஊழல் நிறைந்த ஒருவரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனூஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அரசியல் தொடர்புள்ள, பிணைமுறி மோசடியில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒருவர் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அஜித் நிவாட் கப்ரால் போன்ற ஒருவர் மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்படுவது பொதுமக்களின் நிதி சார் உரிமைகள் மீறப்படுவதற்கு காரணமாக அமையும் என்று குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.