ஐநா கூட்டத் தொடரில் ஜனாதிபதி ஜனாதிபதி கலந்துகொண்டிருந்த நிலையில், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் மற்றும் சிங்கள அமைப்புகளை சேர்ந்தோர் இருவேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.
நேற்றைய தினம் ஐநா கூட்டத் தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றினார்.
இவ்வேளையில், இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களை அடிப்படையாகக் கொண்டு, புலம்பெயர் தமிழர் அமைப்புகளை சேர்ந்தோர், ஐநா தலைமையகத்திற்கு அருகில் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை 2019 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நீதியை வலியுறுத்தி இன்னுமொரு அமைப்பு அந்தப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் புலம்பெயர் சிங்களவர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இவர்களின் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக அந்தப் பகுதியில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.