அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே இன்று விசேட கலந்துரையாடலொன்று நடத்தப்படவுள்ளது.
இன்று பிற்பகல் 4.30 மணியளவில் அலரி மாளிக்கையில் இந்த கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தகவல்கள் தெரிவிக்கின்றன.
கெரவலப்பிட்டிய அனல் மின் உற்பத்தி நிலையத்தின் ஒருபகுதியை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
கெரவலப்பிட்டிய அனல் மின்நிலையத்தை வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்கும் திட்டத்தை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 10 கட்சிகள் எதிர்க்கும் நிலையிலேயே இந்தக் கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.
அண்மையில் குறித்த 10 கட்சிகளும் கூடி இது தொடர்பில் கடுமையான தீர்மானத்தை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.