November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊரடங்கு காலப்பகுதியில் புத்தக விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி!

(photo :Sri Lanka Book Shop)

இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள காலத்தில் புத்தக விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளத பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் விடுத்த  பரிந்துரைத்துரைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் செயலாளர் சமந்த இந்திவர சமரசிங்க, ஊரடங்கு அமுலில் உள்ள காலத்தில் புத்தக விற்பனை நிலையகங்களை திறப்பதற்கு அனுமதி வழங்குமாறு பொலிஸ்மா அதிபரிக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளுக்கு அமைய பொது சுகாதார பரிசோதகர்களின் மேற்பார்வையின் கீழ் புத்தக விற்பனை நிலையகங்களை திறக்க அனுமதிக்குமாறு பொலிஸ் மா அதிபர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம்  கேட்டுக்கொண்டார்.

புத்தக விற்பனை நிலையங்கள் தொடர்ச்சியாக மூடப்பட்டிருப்பதால் மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான புத்தகங்களை கொள்வனவு செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குறித்த கடிதத்தில் சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தோடு ஒருவருடத்திற்கு மேலாக புத்தக விற்பனை நிலையகங்களை மூடப்பட்டுள்ளதால் பொருளாதார ரீதியில் தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.