இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் விலை உயர்வுக்கு இணையாக உள்ளூர் பால் மாவின் விலையையும் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளூர் பால் உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து மில்கோ நிறுவனத்தின் தலைவர் லசந்த விக்ரமசிங்க கருத்து தெரிவிக்கையில்,
பால் தேநீர் தயாரிக்க நுகர்வோருக்கு பால் மாவுக்கு பதிலாக திரவ பாலை பயன்படுத்துவது மலிவானது. எனவே, பால் மா பற்றாக்குறையால் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு திரவ பாலின் பயன்பாடு தான் ஒரு தீர்வு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, சந்தையில் பால் மாவுக்கு இன்னும் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், தற்போதைய நிலைவரப்படி பால் மா விலை உயர்வால் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.