May 14, 2025 20:09:30

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மீட்கப்பட்ட மிகப் பெரிய இரத்தினக்கல் சுவிட்சர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டது

இரத்தினபுரி – பெல்மடுல்ல பகுதியில் அண்மையில் மீட்கப்பட்ட உலகின் மிகப் பெரிய நீல இரத்தினக்கல் கொத்தணி சுவிட்சர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரத்தினக்கல்லின் மதிப்பு எவ்வளவு என்பதை மதிப்பிடுவற்காகவே இவ்வாறு சுவிட்சர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, குறித்த இரத்தினக்கல்லின் உரிமையாளர்கள் அதை சுவிட்சர்லாந்துக்கு எடுத்துச் சென்றதாகவும், அதன் மதிப்பை மதிப்பிட்ட பிறகு, சீனாவில் நவம்பர் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள உலகப் புகழ் பெற்ற இரத்தினக்கல் ஏலத்தில் விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.