January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ- லாட்விய ஜனாதிபதி எகில்ஸ் சந்திப்பு

இலங்கை மற்றும் லாட்வியா குடியரசுக்கு இடையில் இருதரப்பு தொடர்புகளை முன்னேற்ற இரு நாடுகளினதும் அரச தலைவர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் லாட்விய குடியரசின் ஜனாதிபதி எகில்ஸ் லெவிட்ஸ் ஆகியோருக்கு இடையே நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத் தொடரினது அரச தலைவர்கள் மாநாட்டுக்கு மத்தியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் இருபத்து ஐந்து வருடகால தூதரகத் தொடர்புகளைத் தொடர்ந்து முன்னோக்கிக் கொண்டுசெல்வதற்காக, பலமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்பது இரு அரச தலைவர்களதும் கருத்தாக அமைந்துள்ளது.

கல்வி, டிஜிட்டல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில், இரு நாடுகளுக்கிடையிலான தொடர்புகளை அதிகரித்துக்கொள்வது தொடர்பிலும், இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

This slideshow requires JavaScript.