
இலங்கையின் பாராளுமன்றத்துக்கு அருகே உள்ள தியவன்னா ஓயாவில் ஏற்பட்டுள்ள எண்ணெய்க் கசிவை ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர கேட்டுக்கொண்டுள்ளார்.
தியவன்னா ஓயாவில் எண்ணெய்க் கசிவு பதிவானதைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு, அமைச்சர் மத்திய சுகாதார அதிகாரசபைக்கு உத்தரவிட்டுள்ளார்.
தியவன்னா ஓயாவில் இரண்டு நாட்களுக்கு முன்னர் எண்ணெய்க் கசிவு பதிவாகியதாகவும், தனது நண்பர் ஒருவர் அதுதொடர்பான படங்களை அனுப்பி வைத்ததாகவும் சுற்றாடல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எண்ணெய்க் கசிவை ஆராய்ந்து, கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.